×

முதல் இன்னிங்சில் இந்தியா 404 ரன் குவிப்பு: குல்தீப் சுழலில் வங்கதேசம் திணறல்

ஐதராபாத்: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்துள்ளது. சட்டோகிராமில் நடந்து வரும் இந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ராகுல் 22, கில் 20, கோஹ்லி 1, பன்ட் 46, புஜாரா 90, அக்சர் 14 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் 82* ரன், அஷ்வின் இருவரும் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஷ்ரேயாஸ் மேற்கொண்டு 4 ரன் மட்டுமே சேர்த்து 86 ரன்னில் (192 பந்து, 10 பவுண்டரி) அவுட்டானார். அஷ்வின் - குல்தீப் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்தது. அரைசதம் விளாசிய  அஷ்வின் 58 ரன், குல்தீப் 40 ரன் எடுத்து வெளியேற, சிராஜ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா முதல் இன்னிங்சில் 404 ரன் குவித்து ஆல் அவுட்டானது (133.5 ஓவர்). உமேஷ் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம்,  மெஹிதி ஹசன் மிராஸ் தலா 4 விக்கெட், எபாதத், காலித் அகமது  தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து திணறியது. அந்த அணி 2ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு  133 ரன் மட்டுமே எடுத்துள்ளது (44 ஓவர்).  இந்திய பந்துவீச்சில்   குல்தீப் 4, சிராஜ் 3,  உமேஷ் 1 விக்கெட் எடுத்தனர். மெஹிதி ஹசன் 16 ரன்,  எபாதத் உசைன் 13 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 2 விக்கெட் மட்டுமே இருக்க, முதல் இன்னிங்சில் இன்னும் 271 ரன் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

Tags : India ,Bangladesh ,Kuldeep Chul , India pile up 404 runs in first innings: Bangladesh stifled by Kuldeep Chul
× RELATED சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் திரிபுராவில் கைது